இந்தியர்களுக்கு வஞ்சம் வைத்த ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் - காரணம் என்ன தெரியுமா?! - Seithipunal
Seithipunal


ஆப்பிள் நிறுவனம் அதன் புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை கடந்த வாரம் சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தியது. இந்த மாடல்களின் முன்பதிவு இந்தியாவில் செப்டம்பர் 9-ஆம் தேதி துவங்கியது. 

ஐபோன் 14 பிளஸ் விற்பனை அக்டோபர் மாத வாக்கில் துவங்குகிறது. இதனை தவிர ஐபோன் 14 சீரிசில் உள்ள மற்ற மாடல்களின் விற்பனை வரும் செப்டம்பர் 16-ஆம் தேதி துவங்க உள்ளது. 

இந்தியாவில் புதிய ஐபோன் 14 சீரிஸ் விலை ரூ. 79 ஆயிரத்து 900 என துவங்குகிறது. இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் புது ஐபோன் மாடல்கள் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் டாலர் மதிப்பு காரணமாக புது ஐபோன்களின் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. 

இந்திய சந்தையில் ஐபோன் மாடல்களின் விலையில் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி மற்றும் 22 சதவீதம் இறக்குமதி வரி உள்ளிட்டவை சேர்த்து வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் முதல் 6 மாத காலத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட ஐபோன்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. 

குறைந்த விலையில் ஐபோன் 14 சீரிஸ் விற்பனை செய்யப்படும் 5 நாடுகளின் பட்டியல்,

அமெரிக்காவில், ஐபோன் 14 799 டாலர்கள், ஐபோன் 14 பிளஸ் 899 டாலர்கள், ஐபோன் 14 ப்ரோ 999 டாலர்கள், ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் 1099 டாலர்கள் என விற்பனை செய்யப்படுகிறது.

கனடாவில், ஐபோன் 14 1099 CAD இந்திய மதிப்பில் ரூ. 63 ஆயிரத்து 601 ஐபோன் 14 பிளஸ் 1249 CAD இந்திய மதிப்பில் ரூ. 76 ஆயிரத்து 222 ஐபோன் 14 ப்ரோ 1399 CAD இந்திய மதிப்பில் ரூ. 85 ஆயிரத்து 376 இந்திய மதிப்பில் ரூ. 94 ஆயிரத்து 530 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஹாங் காங்கில், ஐபோன் 14 8599 HK, ஐபோன் 14 பிளஸ் 7699 HK, ஐபோன் 14 ப்ரோ 8599 HK, ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் 8599 HK என விற்பனை செய்யப்படுகிறது. 

சிங்கப்பூரில் ஐபோன் 14 1299 SGD, ஐபோன் 14 பிளஸ் 1489 SGD, ஐபோன் 14 ப்ரோ 1649 SGD, ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் 1799 SGD, என விற்பனை செய்யப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில், ஐபோன் 14 1399 டாலர்கள், ஐபோன் 14 பிளஸ் 1579 டாலர்கள், ஐபோன் 14 ப்ரோ 1749 டாலர்கள், ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் 1899 டாலர்கள் என விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Apple iPhone 14 series india price list


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->