IMEI குலைப்பு செய்தால் 3 ஆண்டு சிறை! - மொபைல் பயனர்களை அதிர்ச்சியடைய வைத்த மத்திய தொலைத் தொடர்புத்துறையின் புதிய விதி - Seithipunal
Seithipunal


மத்திய தொலைத் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் முக்கியமான எச்சரிக்கைகள் இடம்பெற்றுள்ளன. அதில் கூறப்பட்டதாவது," சிம் கார்டு ஆன்லைன் மோசடி, நிதி கFreud செய்யும் குற்றங்கள் அல்லது எந்தவொரு சட்டவிரோத செயல்களுக்கும் பயன்படுத்தப்பட்டால், அந்த சிம் எண் யாரின் பெயரில் உள்ளது என்ற அடிப்படையில் நேரடி பொறுப்பு அந்த வாடிக்கையாளர்மீதே சுமத்தப்படும்.

எனவே, சிம் கார்டுகளை மற்றவர்களிடம் ஒப்படைப்பது, பரிமாறுவது அல்லது தற்காலிகமாக கூட கொடுப்பது கடுமையாக தவிர்க்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.மேலும், மொபைல் போன்களில் உள்ள IMEI எண்களை மாற்றுதல், திருத்துதல் அல்லது குலைப்பு செய்வது ‘தொலைத் தொடர்பு விதிமுறைகள் – 2024’ன் படி முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகைய போலி IMEI கொண்ட செல்போன்களை வைத்திருப்பதும், பயன்படுத்துவதும் சட்ட விரோதம். பொதுமக்கள் இதற்குள் விழாமல் இருக்க கடுமையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.IMEI எண் குலைப்பு உள்ளிட்ட தொலைத் தொடர்பு விதிகளை மீறுவோருக்கு அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, அல்லது ரூ.50 லட்சம் அபராதம், அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தங்கள் மொபைல் IMEI எண்கள் நம்பகமானதா என்பதை உறுதிப்படுத்த மக்கள் ‘சஞ்சார் சாதி’ இணையதளம் அல்லது மொபைல் செயலியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அங்குத் தங்கள் சாதனத்தின் நிறுவனப் பெயர், மாடல், உற்பத்தியாளர் விவரங்கள் போன்ற அனைத்தும் தெளிவாக காணலாம்.

அத்துடன், அங்கீகரிக்கப்படாத உதிரிபாகங்கள், தரமற்ற மோடம் போன்ற சாதனங்கள் வாங்க வேண்டாம் என்றும், போலி ஆவணங்கள் பயன்படுத்தி சிம் வாங்குதல், ஆள் மாறாட்டம், மோசடி ஆகியவற்றிலிருந்து மக்கள் விலகிச் செல்ல வேண்டும் என்றும் தொலைத் தொடர்புத்துறை வலியுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

3 years jail tampering IMEI New rule Central Department Telecommunications that shocked mobile users


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->