தவெக எம்எல்ஏ இளையராஜாவை சந்தித்தது உண்மைதான். ஆனால்..? யூடியூபர் திருகாவுக்கரசு விளக்கம்..!
YouTuber Thirukavukarasu explains his meeting with TVK MLA Ilayaraja
தவெக எம்எல்ஏக்களிடம் ரூ.35 கோடி குதிரை பேரம் பேசிய வழக்கில் யூடியூபர் திருநாவுக்கரசு ஐந்து செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். திருநாவுக்கரசு உள்ளிட்டோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கியுள்ளது.
அதன்படி, நேற்று திருவல்லிக்கேணி காவல் நிலைய நிலையத்தில் அவர் ஆஜராகி கையெழுத்திட்டார்.அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது;
தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் நான் பேசியது உண்மைதான் என்றும், ஓர் அரசியல் ஆய்வாளர் என்ற முறையில் தரவுகளைச் சேகரிப்பதற்காகவே அவரைத் தொடர்பு கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தனது தரப்பு வாதங்களை நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமாருடன் தனக்கு எவ்விதத் தொடர்பும் கிடையாது என்று குறிப்பிட்ட அவர், கடந்த 25 ஆண்டுகளாக அரசியல் ஆய்வில் ஈடுபட்டு வருவதாகவும், இதுவரை 65-க்கும் மேற்பட்ட ஆய்வுகளைச் செய்துள்ள்ளதாகவும், தேர்தலுக்கு முன்பாக தவெக தலைவர் விஜய்யை சந்தித்து 1.5 மணி நேரம் ஆலோசனை நடத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஜான் ஆரோக்கியசாமி, சரண் ரெட்டி ஆகியோருடனும் தேர்தல் தொடர்பாக பேசியதாகவும் திருநாவுக்கரசு கூறியுள்ளார். மேலும், இதற்கு எந்தக் கட்டணமும் பெறவில்லை என்றும், மேகாலயா புராஜெக்ட் குறித்தோ, சிங்கப்பூர், பெங்களூருவில் இருந்து ஹவாலா பணம் பெற்றது குறித்தோ காவல்துறை கூறும் தகவல்கள் தவறானவை, அப்படி ஒரு புராஜெக்ட் பற்றி நான் பேசவே இல்லை என்று மறுத்துள்ளார்.
English Summary
YouTuber Thirukavukarasu explains his meeting with TVK MLA Ilayaraja