இருசக்கர வாகனம் மீது மோதிய அரசு பேருந்து.. பரிதபமாய் பலியான இளைஞர்கள்.. புதுக்கோட்டை அருகே நிகழ்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதியதில் இருவர் பலியான சம்பவம் சுகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை சேர்ந்தவர் ஐயப்பன். இவரது நண்பர் ராஜா என்பவரும் அந்த பகுதிகளில் கூலி வேலை செய்து வருகின்றனர். புதுக்கோட்டை திலகர் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் அதனை பலர் வேடிக்கை பார்த்தனர்.

சிலை கரைப்பு முடிந்த பின் ராஜாவும் அவரது நண்பர் ஐயப்பன் தங்களது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, புதுக்கோட்டை நகர காவல் நிலையம் அருகே அவர்கள் சென்று கொண்டிருந்த பொழுது புதிய பேருந்து நிலையத்திலிருந்து தஞ்சாவூரை நோக்கி சென்ற அரசு பேருந்து ஒன்று அவர்கள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

இதில் இருவரும் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானர். இந்த விபத்து குறித்து தகவல்அறிந்து வந்த காவல்துறையினர் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையின் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தஞ்சாவூரை நோக்கி செல்லும் பேருந்துகள் அனைத்தும் இரவு நேரங்களில் வழக்கமான வழியில் செல்லாமல் வழித்தடம் மாறி செல்வதால் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். விபத்துகளை தடுப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாற்றுப்பாதையில் பேருந்தை இயக்கும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youths Death in accident at Puthukottai


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->