மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய பள்ளி சிறுவன் - வாலிபர் செய்த அதிர்ச்சி செயல்.! - Seithipunal
Seithipunal


சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த ராபர் என்பவரின் மகன் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு பயின்று வருகிறார். இந்தச் சிறுவன் கடந்த 16ம் தேதி பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பி வந்துக் கொண்டிருந்தார்.

அப்போது, முத்துமாரியம்மன் கோவில் தெருவில் தேங்கி இருந்த மழைநீரில் பாய்ந்துள்ளது. இதை தெரியாமல் தண்ணீரில் கால் வைத்த சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவன் தண்ணீரில் விழுந்து துடிதுடித்தார்.

அந்த நேரத்தில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த கண்ணன் என்ற இளைஞர், தனது உயிரையும் பொருட்படுத்தாமல் மின்சாரம் தாக்கி தண்ணீரில் உயிருக்கு போராடிய சிறுவனின் கையை பிடித்து வெளியே இழுத்தார். 

உடனே அருகில் இருந்த சிமெண்ட் தரையில் சிறுவனை வைத்து அவருக்கு முதலுதவி அளித்து உயிரை காப்பாற்றினார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

youth rescue school student for electric shock attack in chennai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->