இளம்பெண்ணை இறக்கிவிட சென்றதால் வந்த வினை.. சண்டையை விளக்க வந்த இளைஞர் அடித்து கொலை..! - Seithipunal
Seithipunal


தங்கையின் தோழியை இளைஞர் பைக்கில் அழைத்துச்சென்றதால் ஏற்பட்ட தகராற்றில் ஒருவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் மாவட்டம், நஞ்சை காளிக்குறிச்சியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது தங்கையும் ராஜபுரத்தை சேர்ந்த பெண்ணும் நெருங்கிய தோழியாக இருந்து வருகின்றனர். அந்த பெண்ணை மணிகண்டன் தனது இருசக்கர வாகனத்தில் ராஜபுரத்தில் கொண்டு விட்டுள்ளார்.

அந்த பகுதியை சேர்ந்த மதன் (26), அபிஷேக் (19), தமிழரசன் (19)ஆகியோர் தங்கள் பகுதி பெண்ணை ஏன் வண்டியில் கொண்டு வந்துவிட்டாய் என அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். அப்போது தனது நண்பனை சூர்யாவை போனில் அழைத்து மணிகண்டன் நடந்தவற்றை கூறியுள்ளார். சூர்யா தனது செல்போனில் ராஜபுரத்தைச் சேர்ந்த நபர்களிடம் பேசியுள்ளார்

அப்போது இரு தரப்புக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், சம்பவதன்று ராஜபுரத்தைச் சேர்ந்த மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில்  ஆயுதங்களுடன் வந்து சூர்யாவை தாக்கியுள்ளனர்.அப்போது அங்கிருந்த அரவிந்த் என்பவர் அவரகளை தடுக்க முயன்றபோது அவரகள் அரவிந்தை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றனர்.

இதில், படுகாயமடைந்த அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அவரை பரிசோதித்தமருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth Murder in Karur


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->