தண்டவாளத்தை கடக்க முயன்ற இளைஞர்.! எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பலி.!
Youth killed in train collision in avadi
சென்னை ஆவடியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி இளைஞர் உயிரிழந்துள்ளார்.
சென்னை ஆவடியை அடுத்த பாண்டேஸ்வரம் ஏகாம்பரசத்திரம் பகுதியை சேர்ந்தவர் அவினாஷ்(21). இவர், அம்பத்தூர் எஸ்டேட்டில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவினாஷ் வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக அம்பத்தூர் எஸ்டேட்டில் இருந்து ஆவடிக்கு மின்சார ரயிலில் வந்தார்.
பின்பு அங்கிருந்து அவினாஷ் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அவ்வழியாக சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார் அவினேஷின் உடலை கைப்பற்றி பிரயோத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து ஆவடி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Youth killed in train collision in avadi