இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த வாலிபர் கைது!
Youth arrested for depicting a young womans photograph in an obscene manner
காதலிக்க மறுத்த இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டு மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை சூளைமேட்டில் வசித்து வரும் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் தனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் மர்மநபர் பதிவிட்டு வருவதாக அண்ணாநகர் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார்.இதையடுத்து வழக்குப்பதிவு போலிஸார் விசாரணை நடத்தியதில்
இந்த செயலில் ஈடுபட்ட வியாசர்பாடியை சேர்ந்த ஜோ ரிச்சர்ட் வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஆன்லைனில் இருசக்கர வாகனம் ஓட்டி வரும் ஜோ ரிச்சர்ட், தினமும் சூளைமேட்டில் இருந்து அந்த பெண்ணை முகப்பேரில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு அழைத்துச் சென்று விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு ஜோ ரிச்சர்ட்அந்த பெண்ணை காதலிக்க தொடங்கினார். ஆனால் அந்த பெண் அவரை காதலிக்க மறுத்துவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்ணை தனது காதல் வலையில் வீழ்த்த நினைத்த ஜோ ரிச்சர்ட், ஏ.ஐ.தொழில் நுட்பத்தில் அந்த பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூகவலைதளத்தில் அனுப்பியதும், இதை காட்டி அந்த பெண்ணிடம் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டியதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து லேப்டாப், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
English Summary
Youth arrested for depicting a young womans photograph in an obscene manner