அபராதம் விதித்த போலீசாரை சரமாரியாகத் தாக்கிய இளைஞர் கைது.!
youth arrested for attack police officer in viruthunagar
அபராதம் விதித்த போலீசாரை சரமாரியாகத் தாக்கிய இளைஞர் கைது.!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையத்தில் தென்றல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாந்த ரூபன். இவர் ராஜபாளையம் போக்குவரத்துக் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், சாந்த ரூபன் சங்கரன்கோவில் முக்கு சாலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வாலிபர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் வந்துள்ளார். இதைப்பார்த்த சாந்த ரூபன் அவரைத் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தார்.
ஆனால், அந்த வாலிபர் அபராதம் விதிக்கக் கூடாது என்று சாந்தரூபனிடம் வாக்குவாதம் செய்தார்.

இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த வாலிபர் போக்குவரத்து தலைமைக் காவலர் சாந்தரூபனைத் தாக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து சாந்தரூபன் அந்த வாலிபரை ராஜபாளையம் போலீஸாரிடம் ஒப்படைத்தார்.
அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில், அந்த வாலிபர் ராஜபாளையம் பொன்னகரம் பகுதியைச் சேர்ந்த பிரித்திவிராஜ் என்பதும், அவர் எலக்ட்ரிக் கடையில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த வாலிபர் மீது தலைமைக் காவலரைத் தாக்கியதாக வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
English Summary
youth arrested for attack police officer in viruthunagar