சென்னை || மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது..! - Seithipunal
Seithipunal


பொறியியல் கல்லூரி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை ஆவடி அடுத்த வீராபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரதீப். இவர் அங்குள்ள கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகி வந்தனர்.

இதற்கிடையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் முதல் அந்த மாணவியை அடிக்கடி வழியில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது பற்றி யாரிடமாவது கூறினால் தாய் மற்றும் தம்பியை கொலை செய்ததாக மிரட்டியுள்ளார்.

இதனால், கல்லூரி மாணவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். பிரதீப்பின் தொல்லை அதிகரிக்கவே மன வளர்ச்சிக்கான மாணவிகள் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

youth arrested due to Sexually abusing a Girl in Chennai


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->