களக்காடு அருகே வாலிபர் அரிவாளால் வெட்டிக்கொலை...! சில மணி நேரங்களிலேயே கொலையாளி கைது...! நடந்தது என்ன...?
young man hacked death sickle near Kalakkadu killer arrested within few hours What happened
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே நீடித்து வந்த முன்விரோதம் திடீரென கொலைச் சம்பவமாக வெடித்தது. மணிமுத்தாறு கால்வாய் கரையில் வாலிபரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய கும்பல், அவரை ரத்த வெள்ளத்தில் சாய்த்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக காவலர்கள் விரைந்து செயல்பட்டு ஒருவரை கைது செய்துள்ளனர்.களக்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழதேவநல்லூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் ராம் (33). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு முத்துராஜா என்பவர் தொலைபேசி மூலம் ரமேஷ் ராமை தொடர்புகொண்டு வரவழைத்துள்ளார். இதையடுத்து ரமேஷ் ராம் தனது உறவினர்கள் இருவருடன் கீழதேவநல்லூர் மணிமுத்தாறு கால்வாய் கரைக்கு சென்றுள்ளார்.அங்கு இருதரப்பினருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றி தகராறாக மாறியதாக தெரிவிக்கப்படுகிறது.
அப்போது ஆத்திரமடைந்த கும்பல், ரமேஷ் ராமை அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.கொலை குறித்து தகவல் கிடைத்ததும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், நாங்குநேரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் களக்காடு காவல் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.அங்கு கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் ரமேஷ் ராமின் உடலை கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலைக்கான பின்னணி மற்றும் இதில் தொடர்புடையவர்கள் குறித்து தீவிர விசாரணை நடைபெற்றது.கொலை நடந்த சில மணி நேரங்களிலேயே களக்காடு காவலர்கள் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த கொலை வழக்கில் தொடர்புடைய ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சிலர் தலைமறைவாக இருப்பதால், அவர்களை பிடிக்க காவலர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.முன்விரோதம் காரணமாக வாலிபர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் களக்காடு பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
young man hacked death sickle near Kalakkadu killer arrested within few hours What happened