போன் மோகத்தால் பறிபோன இளம் உயிர்...! அம்மா திட்டியதாகக் கூறி மாணவி எடுத்த விபரீத முடிவு... சோகத்தில் முடிந்த போராட்டம்...! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே திருப்புளியங்குடி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சந்திரமோகன். விவசாயியான இவரது மகள் இலக்கிய ஸ்ரீநிதி (22). இவர் நாசரேத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார்.கடந்த 5-ந்தேதி வீட்டில் இருந்தபோது இலக்கிய ஸ்ரீநிதி செல்போனை பார்த்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது.

இதனை கவனித்த அவரது தாயார் ஜான்சிராணி, படிப்பில் கவனம் செலுத்தாமல் செல்போனை பயன்படுத்துவதாகக் கூறி அவரை கண்டித்துள்ளார்.

இதனால் மனவேதனை அடைந்த மாணவி, வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். இதனை பார்த்து பதற்றமடைந்த பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த இலக்கிய ஸ்ரீநிதி, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் வயதிலேயே மாணவி உயிரிழந்த சம்பவம் திருப்புளியங்குடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

young life lost phone addiction student made bizarre decision claiming that her mother had scolded her struggle that ended tragedy


கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?


செய்திகள்



Seithipunal
--> -->