'பெண்களுடன் ஜாலியாக இருக்கலாம்'...! ஆசை வார்த்தை கூறி லட்சக்கணக்கில் அபேஸ்...! - 4 பேர் அதிரடி கைது...! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (28) என்பவர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். சமீபத்தில் அவரது செல்போன் எண்ணிற்கு மர்ம குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில், திருப்பூரிலுள்ள சில லாட்ஜ்களில் பெண்கள் தங்கவைக்கப்பட்டிருப்பதாகவும், குறிப்பிட்ட தொகையை அனுப்பினால் அவர்களுடன் நேரம் செலவிடலாம் என்றும் கவர்ச்சிகரமாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் ஆசை வலையில் சிக்கிய சந்தோஷ்குமார், அந்த செயலி மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது பெண்களின் புகைப்படங்களை அனுப்பி வைத்து நம்பிக்கை ஏற்படுத்திய கும்பல், பின்னர் லாட்ஜ் முகவரி உள்ளிட்ட விவரங்களையும் பகிர்ந்து கொண்டு கட்டுக்கட்டாக பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

முதற்கட்டமாக க்யூஆர் கோடு அனுப்பி ரூ.4 ஆயிரம் பெற்ற அந்த மர்ம கும்பல், பின்னர் மேலும் ரூ.2 ஆயிரம் அனுப்புமாறு வற்புறுத்தியுள்ளது. இதையடுத்து தான் மோசடியில் சிக்கியிருப்பதை உணர்ந்த சந்தோஷ்குமார், திருப்பூர் வடக்கு காவலர்களிடம் புகார் அளித்தார்.அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவலர்கள் தீவிர விசாரணையில் இறங்கினர்.

இந்த இணையவழி பண மோசடி தொடர்பாக திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்த வெற்றிவேல் (41), சக்திவிக்னேஷ் (24), கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த கோகுல்குமார் (35), அருண்பிரசாத் (26) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

இந்த விசாரணையில் வெற்றிவேல் ஓட்டல் தொழிலாளி என்றும், கோகுல்குமார் பொறியியல் பட்டதாரி என்றும், அருண்பிரசாத் பெயிண்டர் தொழிலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த கும்பல் இணையதளம் மற்றும் செயலிகள் மூலம் பலரை குறிவைத்து இதேபோன்ற மோசடிகளில் ஈடுபட்டு வந்ததும் காவலர்கள் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

You can have fun with women fraud says he flirting with millions 4 people arrested action


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->