ஏற்காட்டில் கொட்டி தீர்த்த கனமழை: கடும் குளிரால் மக்கள் அவதி!
Yercaud heavy rain people suffered
கடந்த சில நாட்களாக சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் நேற்று தொடர்ச்சியாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மழை பெய்தது.
குறிப்பாக நேற்று காலை முதல் ஏற்காட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று மதியம் சுமார் 2 மணி அளவில் தொடங்கிய கனமழை 6 மணி வரை கொட்டி தீர்த்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
பின்னர் சாரல் மழையாக நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது. இதனை தொடர்ந்து பனிமூட்டம் நிலவி வருவதால் ஏற்காட்டில் கடும் குளிரால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதித்து அவதிப்பட்டு வருகின்றனர்.

சேலம் புறநகர் பகுதிகளான தலைவாசல், காடையாம்பட்டி, ஆணைமடுவு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தேங்கியது.
இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ள காடாக காட்சியளிக்கிறது. சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 35 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது எனவும் மாவட்டம் முழுவதும் 101.2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
Yercaud heavy rain people suffered