உலக வறுமை ஒழிப்பு தினம்!.
World Poverty Eradication Day
உலக வறுமை ஒழிப்பு தினம்!.
உலக வறுமை ஒழிப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 17 ஆம் தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.
இத்தினம் 1 987ஆம் ஆண்டு முதன்முதலாக பிரான்சில் பாரிஸ் நகரில் கடைபிடிக்கப்பட்டது. உலக அளவில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி பசிக்கொடுமையிலிருந்து மக்களை விடுவிப்பதற்காக ஐ.நா.சபை 1992ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 17 ஆம் தேதியை வறுமை ஒழிப்பு தினமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதன் நோக்கம் வறுமையை போக்க அனைத்து மக்களும் ஒன்று சேர வேண்டும் என்பதாகும்.

முதல் தமிழ் சபாநாயகர் திரு.R.K.சண்முகம் அவர்கள் பிறந்ததினம்!.
இந்திய அரசின் முதல் நிதியமைச்சர், மற்றும் முதல் தமிழ் சபாநாயகர் திரு.R.K.சண்முகம் அவர்கள் பிறந்ததினம்!.
சர் ஆர். கே. சண்முகம் செட்டியார் (அக்டோபர் 17, 1892 – மே 5, 1953) கோயம்புத்தூரில் பிறந்தார். இந்தியப் பொருளாதார நிபுணர். இந்தியாவின் போற்றத்தக்க பாராளுமன்ற வாதி, சிறந்த பேச்சாளர், தமிழிசை இயக்கத்தை உருவாக்கி வேரூன்றச் செய்தவர்.
1947 ஆம் ஆண்டு இந்திய விடுதலைக்குப் பின்னர் பதவியேற்ற இந்திய அரசின் முதல் நிதியமைச்சர், மற்றும் இந்திய நாடாளுமன்றத்தின் முதல் தமிழ் சபாநாயகர் என்ற பல பெருமைகளை உடையவர். நாட்டுப் பிரிவினை போது எழுந்த கணக்கு பிணக்குகளுக்கு சரியான முடிவு கண்டவர்.
தமிழ்நாடு, கோயம்புத்தூர் நகரில் பல தொழிற்சாலைகளுக்கு உரிமையாளர்களான வாணிய செட்டிக் குடும்பத்தில் ஆர். கந்தசாமி செட்டியார் - ஸ்ரீரங்கம்மாள் தம்பதிக்கு மூத்த மகனாகப் பிறந்தார்.
சர் ஆர்.கே.சண்முகம் செட்டி 1920-இல் அன்னி பெசன்ட் அம்மையாருடன் சில மாதங்கள் இங்கிலாந்து சென்று பல பொதுக் கூட்டங்களில் உரையாற்றி, இந்திய சுயாட்சிக்காக தமது கருத்துகளை வெளியிட்டார்.
1931 முதல் 1945 வரை கொச்சி அரசின் திவானாகப் பணிபுரிந்தார். அவரது ஆட்சிக்காலத்தில் அனைத்து துறைகளிலும் நிர்வாக சீர்மை மேம்பட்டது. அவரது கண்காணிப்பில் கொச்சி அரசின் தலைமையகம் நவீனப்படுத்தப்பட்டது.
நாடாளுமன்றத்தின் சுயராஜ்யக் கட்சியின் (காங்கிரஸ்) தலைவராக நேருவும், செயலாளராக சித்தரஞ்சன் தாசும், கொறடாவாக ஆர்.கே.சண்முகனாரும் பணியாற்றிச் சிறப்பித்தனர்.
English Summary
World Poverty Eradication Day