அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் அறிவிப்பு ரத்து..பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அறிவிப்பு!
Anganwadi workers and helpers announcement canceled Women and Child Development Department announcement
அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் பணிக்கு விண்ணப்பித்த நபர்கள் மீண்டும் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும் என்பதனை இத்துறையின் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம் என புதுச்சேரி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.
சமீபத்தில், புதுச்சேரி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, புதுச்சேரி அங்கன்வாடி யூனியன் பிரதேசத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் பதவிக்கு கௌரவ ஊதிய அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு குறிப்பு. 195/DWCD/ICDS/2025-26,dt: 30.10.2025 ULL தொழில்நுட்ப பிழை ஏற்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் அந்த வலைதளத்தை அணுக முடியவில்லை.

இந்த தொழில்நுட்ப பிரச்சனையை இத்துறை நிவர்த்தி செய்து வருகிறது. திருத்தும் செயல்முறை எதிர்பார்த்ததை விட அதிக நேரத்தை எடுத்துக்கொள்வதால், முந்தைய அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் திருத்தம் செய்யப்பட்ட பிறகு விண்ணப்பங்களை வரவேற்கும் புதிய அறிவிப்பு வெளியிடப்படும். விண்ணப்பித்த நபர்கள் மீண்டும் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும் என்பதனை இத்துறையின் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம் என புதுச்சேரி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.
English Summary
Anganwadi workers and helpers announcement canceled Women and Child Development Department announcement