தமிழகத்தில் உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை.. விரைவில் கும்பாபிஷேகம்.!
World long height lord Murugan temple in Salem
சேலத்தில் உலகிலேயே மிக உயரமான முருகன் சிலையுடன் கூடிய கோவிலுக்கு கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற உள்ளது.
சேலம் மாவட்டம் புத்திரகவுண்டன் பாளையத்தில் உலகிலேயே மிக உயரமான முருகன் சிலையுடன் கூடிய கோவில் தற்போது கட்டப்பட்டு வருகிறது.
மேலும், வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இங்குள்ள முருகன் சிலை 146 அடி உயரம் கொண்டதாகும். இந்த முருகன் சிலையை தரிசனம் செய்வதற்காக ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலேசியாவில் இருக்கும் முருகன் சிலை 140 அடி உயரம் கொண்டதாகும். ஆனால் தற்போது சேலத்தில் கட்டப்பட்டுள்ள முருகன் சிலை 146 அடி உயரம் கொண்டது.
இதுகுறித்து கோவில் நிர்வாகி ஸ்ரீதர் தெரிவித்ததாவது, 146 அடி உயரம் உடைய முருகனின் திருவுருவச்சிலையில் கட்டமைப்பு பணிகள் முடிவடைந்தது. மேலும் தற்போது மேல்பூச்சு, ஆடை ஆபரணங்கள் அமைக்கும் நுண்ணிய கலை வேலைப்பாடுகள் முடிந்து வண்ணம் தீட்டும் பணிகளும் நிறைவடைந்தது. உலகிலேயே மிக உயரமான இந்த முருகன் சிலையை பக்தர்கள் தரிசிப்பதற்காக நவீன லிப்ட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்தவுடன் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
World long height lord Murugan temple in Salem