உலக கட்டிடக்கலை தினம்!.
உலக கட்டிடக்கலை தினம்!. (World Architecture Day) ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தின் முதலாவது திங்கட்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. சர்வதேச கட்டிடக் கலையினர் ஒன்றியம் 2005 ஆம் ஆண்டில் உலக கட்டிடக்கலை தினத்தை அறிவித்து கொண்டாடி வருகிறது. நமது வருங்கால நகரங்களையும் குடியிருப்புகளையும் வடிவமைப்பதில் உள்ள கூட்டுப் பொறுப்பை உலகிற்கு எடுத்துணர்த்தும் பொருட்டு இந்நாள் கொண்டாடப்படுகிறது.
கட்டிடக்கலை என்பது கட்டிடங்கள் வடிவமைப்புச் செய்வதற்கான கலையும், அறிவியலும் ஆகும். கட்டிடக் கலையானது கணிதம், அறிவியல், கலை, தொழில்நுட்பம், சமூக அறிவியல், அரசியல், வரலாறு, தத்துவம் போன்றவற்றுடன் தொடர்புடைய ஒரு பல்துறைக்களமாகும்.

புலவர் திரு.புலமைப்பித்தன் அவர்கள் பிறந்ததினம்!.
புலமைப்பித்தன்(அக்டோபர் 6, 1935 - செப்டம்பர் 8, 2021) தமிழ் கவிஞர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவரது இயற்பெயர் ராமசாமி ஆகும். இவர் 1968 இல் குடியிருந்த கோயில் படத்திற்காக எழுதிய நான் யார் நான் யார் என்ற பாட்டிற்காக மிகவும் புகழ் பெற்றவர்.
புலமைப்பித்தன் கோயமுத்தூரில் பிறந்தவர். 1964இல் திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்காக சென்னை வந்தார். அவர் சாந்தோம் உயர்நிலை பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார்.
இவர் தமிழக சட்டமன்றத்தின் துணைத் தலைவராக பணியாற்றினார். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம். ஜி. ராமச்சந்திரன் அவர்களால் "அரசவைக் கவிஞராகவும்" நியமிக்கப்பட்டார். இவர் எம். ஜி. ஆரின் நெருங்கிய நண்பரும் ஆவார்.