மகளிர் உரிமைத்தொகை: நாளை முதல் பெண்களுக்கு மீண்டும் அழைப்பு! - Seithipunal
Seithipunal


நாளை முதல் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது, திமுக தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி திமுக ஆட்சி அமைந்ததும், பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்பட்டுவருகிறது.உதவி தொகை கிடைக்கப்பெறாதவர்களுக்கு பல கட்டங்களாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இந்தநிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சரின் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமானது, பெருநகர சென்னை மாநகராட்சியில் 15.7.2025, 16.07.2025, 17.07.2025 மற்றும் 18.07.2025 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.  

விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் கையேட்டினை வார்டுகளில் தன்னார்வலர்கள் மூலம் 13 அரசுத் துறைகளின் வாயிலாக 43 சேவைகளைப் பெறுவதற்கான  மக்களுக்கு வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து, 22.07.2025 அன்று "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமானது, திருவொற்றியூர் மண்டலத்திற்குட்பட்ட வார்டு-2, இராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட வார்டு-54, அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட வார்டு-95, கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட வார்டு-138, அடையாறு மண்டலத்திற்குட்பட்ட வார்டு-169, பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட வார்டு-181 ஆகிய 6 வார்டுகளில் நடைபெறவுள்ளது.முன்னிட்டு, தன்னார்வலர்கள் மூலம் 13 அரசுத் துறைகளின் வாயிலாக 43 சேவைகளைப் பெறுவதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் கையேட்டினை மக்களுக்கு வழங்கும் பணியானது நாளை (11.07.2025) முதல் தொடங்கி நடைபெறும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Womens Rights Fund Call for women again starting tomorrow


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->