மகளிர் இடஒதுக்கீடு மசோதா: மக்களவையில் 207 வாக்குகள் பெற்று வெற்றி - தொகுதி மறுவரையறை ஏற்பு!
Women Reservation Bill Clears Lok Sabha with 207 Votes Linked to Delimitation Process
இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. தொகுதி மறுவரையறையோடு (Delimitation) இணைக்கப்பட்ட இந்த மசோதா மீது நடைபெற்ற அனல் பறக்கும் விவாதங்களுக்குப் பிறகு, வாக்கெடுப்பு நடைபெற்றது.
வாக்கெடுப்பு விவரங்கள்:
இன்றைய வாக்கெடுப்பில் மொத்தம் 333 உறுப்பினர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். இதில் 207 எம்.பி.க்கள் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தனர். இருப்பினும், தொகுதி மறுவரையறைக்குப் பின்னரே இந்த இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்ற நிபந்தனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, 126 உறுப்பினர்கள் மசோதாவிற்கு எதிராகத் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். மிக முக்கியமான இந்தக் கூட்டத்தில் 86 எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சர்ச்சையும் - தீர்வும்:
இந்த மசோதா சட்டமானாலும், மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறைப் பணிகள் முடிந்த பின்னரே நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே எதிர்க்கட்சிகளின் 126 வாக்குகளுக்குக் காரணமாக அமைந்தது. எனினும், பெரும்பான்மை ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதால், வரும் காலங்களில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிப்பதற்கான முதல்படி வெற்றிகரமாக எடுத்து வைக்கப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக நிலுவையில் இருந்த இந்த மசோதா, தற்போதைய அரசியல் சூழலில் தொகுதி மறுவரையறை விவாதத்தோடு இணைந்து நிறைவேற்றப்பட்டிருப்பது தேசிய அரசியலில் மிக முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.
English Summary
Women Reservation Bill Clears Lok Sabha with 207 Votes Linked to Delimitation Process