சென்னையில் மேலும் 250 பிங்க் ஆட்டோக்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!
women pink autos TNGovt
சென்னை மாநகரில் பெண்களுக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சர்வதேச மகளிர் தினத்தன்று 250 இளஞ்சிவப்பு (Pink) ஆட்டோக்களை தகுதியான பயனாளிகளுக்கு வழங்கி திட்டத்தை துவக்கினார்.
இதனை தொடர்ந்து, 2-ம் கட்டமாக மேலும் பிங்க் ஆட்டோக்கள் வழங்கப்படும் என்பதால், இதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான பெண்கள் அடுத்த மாதம் 6-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
தகுதிகள்:
பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
கைப்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்பதாரிகள் 20 முதல் 45 வயது ஆக இருக்க வேண்டும்.
சென்னையில் குடியிருக்க வேண்டும் மற்றும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
தகுதியான பெண்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சென்னை மாவட்ட சமூக நல அலுவலர் (வடக்கு) அல்லது சென்னை மாவட்ட சமூக நல அலுவலர் (தெற்கு) ஆகிய முகவரிகளில் 6.4.2025க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.