வீட்டுல தோஷமிருக்கு., யாருமில்லாத நேரத்தில் வீட்டில் புகுந்த மந்திரவாதி.! பெண்ணுக்கு நேர்ந்த துயரம்.! - Seithipunal
Seithipunal


சேலத்தில் சூரமங்கலம் அருகே கபிலர் தெருவைச் சேர்ந்த மெஹ்தாஜ் பேகம் என்ற 55 வயது பெண்ணிடம் வீட்டில் தோஷம் இருப்பதாக கூறி அதை கழிக்க சிறப்பு பூஜை நடத்த வேண்டும் என்று மந்திரவாதி பிரபு தெரிவிக்க அந்தப் பெண்ணும் அதனை நம்பி பூஜைக்கு ஏற்பாடு செய்து இருக்கின்றார். 

அப்போது சில பொருட்களை வாங்க பெண்ணை வெளியில் அனுப்பிய மந்திரவாதி வீட்டில் இருந்த 25 பவுன் நகையை திருடிச் சென்று இருக்கின்றார். நகை காணாமல் போனதை அறிந்த பெண் மந்திரவாதியிடம் தனது நகையை திருப்பி கொடுக்குமாறு கேட்டுள்ளார். 

ஆனால், தான் நகை எதையும் எடுக்கவில்லை என்றும், தொந்தரவு செய்தால் உனக்கு செய்வினை வைத்து விடுவேன் என்றும், எனவே ரத்தம் கக்கி செத்துப் போவாய் என்றும் பிரபு மிரட்டி இருக்கின்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர் பிரபுவை கைது செய்து அவரிடம் இருந்த நகை, பைக் மற்றும் நிலம் ஆகியவற்றை மீட்டனர். இதுபோல மாந்திரீகம் செய்வதாக கூறி பலரை மிரட்டி அவர் ஏமாற்றி இருப்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து, காவல்துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

women cheated by manthiravadhi


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal