ஜாதி, மதம் மாறி திருமணம்; கர்நாடகாவில் கர்ப்பிணி தங்கையை கோடாரியால் சரமாரியாக வெட்டிய அண்ணன்..!
Pregnant woman targeted by brother for inter caste marriage in Koppal
கர்நாடக மாநிலம் சித்தப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மீனாட்சி. 22 வயதான இவர் ஒரு வருடத்திற்கு முன்பு உதயகுமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்கள் என்பதால் மீனாட்சி தனது குடும்பத்தை மீறி திருமணம் செய்துகொண்டுள்ளார்.
திருமணத்திற்குப் பிறகு இவர்கள் பெங்களூருவில் வசித்து வந்தனர். இந்நிலையில் கணவருடன் புதன்கிழமையன்று (பிப்ரவரி 18) மீனாட்சி, கொப்பல் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றிற்கு வந்துள்ளார். அப்போது இதையறிந்த அவரது அண்ணன் மஞ்சுநாத் (35) விழா நடக்கும் இடத்திற்கு வந்து மீனாட்சியை கோடாரியால் சரமாரியாக வெட்டியுள்ளார்.

திருமண நிகழ்வில் இருந்த விருந்தினர்கள் தலையிட்டு மீனாட்சியை மீட்டதால் அவருக்கு காயங்கள் தவிர்க்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து மீனாட்சியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவர் சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்த புகாரின் அடிப்படையில் அலவண்டி போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர். பின்னர் குற்றவாளியான மஞ்சுநாத்தை கைது செய்து காவலில் வைத்துள்ளனர். கர்நாடக அரசு இது போன்ற கௌரவக் கொலைகளைத் தடுப்பதற்காகவே, "ஈவா நம்மவ ஈவா நம்மவ" என்ற புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Pregnant woman targeted by brother for inter caste marriage in Koppal