குவாரி திருடர்களுடன் டீல் போட்டு சம்பாதித்த பணம்... மோசமான மோசடி ஆட்சி... அறப்போர் இயக்கம் கடும் விமர்சனம்!
arappor iyakkam condemn to dmk mk stalin govt
அறப்போர் இயக்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "இப்படி ஒரு மோசமான மோசடி ஆட்சியை தமிழ்நாடு இது வரை பார்த்தது இல்லை.
தமிழ்நாடு முழுவதும் குவாரிகள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட இடத்தை தாண்டி கனிம வளங்களை சூறையாடுகிறார்கள். தங்களுக்கு நிணயிக்கப்பட்ட ஆழத்தை தாண்டி தோண்டி எடுக்கிறார்கள். தங்களுக்கு கொடுக்கப்பட்ட கால அளவை மீறி கொள்ளை அடித்துக் கொண்டு இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சட்ட விரோத குவாரிகளை சீல் வைத்து அபராதம் விதிப்பதற்கு பதிலாக ஒரு அரசாணை மூலம் இது வரை அவர்கள் அடித்த கொள்ளைகள் அனைத்தையும் முதலமைச்சர் ஸ்டாலின் சட்டபூர்வமாக்குகிறார். அதற்கு ஒரு சிறிய அபராத தொகை கட்டினால் போதும் என்று அறிவிக்கிறார்.
2 வருடங்களுக்கு முன்பு நெல்லையில் செயல்பட்ட 52 சட்ட விரோத குவாரிகளை மூடி அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையான 262 கோடியை 14 கோடியாக குறைத்து அதையும் தவணை முறையில் கட்டலாம் என்று அறிவித்து அந்த குவாரிகளை திறந்து விட உத்தரவிட்டதும் இதே திமுக அரசு தான். https://youtu.be/j9SkQvImOcI எப்போ திறப்பீங்க கொத்தனாருக்கு வேலை இல்லை என்று பத்திரிக்கையாளகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியை மிரட்டியவர் தான் சபாநாயகர் அப்பாவு. இன்று இவர்கள் தமிழ்நாடு முழுவதும் இந்த தள்ளுபடியை அறிவித்து சட்ட விரோத குவாரிகள் செயல்பட எந்த தடையும் இல்லை என்று அறிவித்துள்ளார்கள். அதாவது தமிழகத்தின் கனிம வளங்களை சூறையாட லைசென்ஸ் கொடுத்துள்ளார்கள்.
இப்படி எல்லாம் குவாரி திருடர்களுடன் டீல் போட்டு சம்பாதித்த பணத்தில் ஒரு சிறிய பகுதியை தான் தேர்தல் சமயத்தில் உங்களுக்கு பிரித்துக் கொடுப்பார்கள். நான் ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டேன் என்று சொல்ல தயாராகுங்கள். இல்லை என்றால் இந்த மோசடி கும்பலில் நீங்களும் இணைந்து விடுவீர்கள். இயற்கை வளங்களை உங்கள் வருங்கால தலைமுறையிடம் இருந்து நீங்களே பறித்து விடுவீர்கள்" என்று தெரிவித்துள்ளது.
English Summary
arappor iyakkam condemn to dmk mk stalin govt