கடன் வாங்க ப்ராசசிங் பீஸ் 1 லட்ச ரூபாய் அனுப்பிய பெண்..கடைசியில் நடந்த அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தில் ஒரு லட்ச ரூபாய் குறைந்த வட்டியில் கடன் வாங்க ஒரு லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் ப்ராசசிங் பீஸ் அனுப்பி ஏமாந்த அரியாங்குப்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

புதுச்சேரி அரியாங்குப்பத்தைச் சேர்ந்த 38 வயது குடும்பத் தலைவி ஒருவர் ஏற்கனவே பஜாஜ் பைனான்ஸில் கடன் வாங்கி தவணைகளை சரியாக செலுத்தி வருகிறார். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மேற்படி பெண்ணை தொடர்பு கொண்ட இணைய வழி மோசடிக்காரர் ஒருவர் உங்களுக்கு குறைந்த வட்டியில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தில் ஒரு லட்ச ரூபாய் கடன் உடனடியாக  வாங்கி தருகிறேன் என்று கூறியுள்ளார் .மேலும் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து தான் நம்மை தொடர்பு கொள்கின்றனர் என்று நம்பி அவர்கள் கேட்ட பணத்தை பல்வேறு தவணைகளில் 1;26;000 ரூபாய் பணத்தை அனுப்பி உள்ளார். 

பணத்தைப் செலுத்திய பின்னரும் கடந்த ஐந்து நாட்களாக லோன் தொகை வந்து சேராததாலும் மீண்டும் அவர்கள் பணத்தை கேட்டதாலும் சந்தேகம் அடைந்தவர் இணைய வழி காவல் நிலையத்தில் நேற்று அந்த பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்தார். அந்த புகார் சம்பந்தமாக மேற்படி நபர் எங்கு இருக்கின்றார் என்று இணைய வழி காவல் நிலையத்தின் மூலமாக கண்டுபிடித்த போது டெல்லிக்கு அருகில் இருப்பது தெரிய வரவே மேற்படி நபர் இணையவழி மோசடிக்காரர்கள் என்று அந்த பெண்ணிடம் தெரிவிக்கப்பட்டது .

பின்னர் தான் அவர்களை தொடர்பு கொண்டவர்கள் இணைய வழி மோசடிக்காரர்கள் என்றும் பணத்தை இழந்ததை அந்தப் பெண் தெரிந்து கொண்டார். இந்த ஆண்டில் மட்டும் 122க்கும் மேற்பட்ட மக்கள் குறைந்த வட்டியில் கடன் வாங்கி தருகிறோம் என்று இணைய வழி மோசடிக்காரர்கள் தனியார் பைனான்ஸ் நிறுவனர்களை போல் பொதுமக்களை தொடர்பு கொண்டு அவர்களை நம்ப வைத்து பல லட்சம் ரூபாய் அளவுக்கு பொதுமக்களை ஏமாற்றியுள்ளனர், ஆகவே பொதுமக்கள் குறைந்த வட்டியில் உடனடியாக கடன் தருகிறோம் என்று எந்த நிதி நிறுவனங்களின் பெயர்களை சொல்லி உங்களை தொடர்பு கொண்டாலும் நம்ப வேண்டாம் என புதுச்சேரி இணைய வழி காவல்துறை சார்பாக பொதுமக்களை எச்சரிக்கை செய்கிறோம் என  தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Woman sends Rs 1 lakh to borrow money The shock at last


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->