100 பவுன் நகைக்கும் அடங்காத பணத்தாசை., வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை..! கோவையில் நடந்த அவலம்..!! - Seithipunal
Seithipunal


100 பவுன் வரதட்சணை பத்தாமல் வரதட்சணை கேட்டு தொல்லை செய்ததால் இளம்பெண் தற்கொலை செய்த கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ராமநாதபுரம், பகுதியில் வசித்து வந்தவர் ராம் பிரகாஷ். இவருக்கு திருப்பூரை சேர்ந்த இலக்கியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.  திருமணத்தின் போது  100 பவுன் நகையும் 5கிலோ வெள்ளியும் ஒரு காரும் வரதட்சணையாக தந்துள்ளனர்.

திருமணமான சில நாட்களிலேயே மீண்டும் வரதட்சணை கேட்டு இலக்கியாவை தொல்லை செய்துள்ளனர். தினமும்  இந்த கொடுமையை அனுபவித்த இலக்கியா தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.

இதனை அடுத்து, இலக்கியாவை சமாதானம் செய்து அழைத்து வந்துள்ளார். இந்நிலையில், ராம் பிரகாஷின் குடும்பத்தினர் இலக்கியாவின் பெற்றோருக்கு செல்போனுக்கு அழைத்து இலக்கியா தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளனர்.

இதனை அடுத்து அங்கு வந்த இலக்கியாவின் பெற்றோர் அவரின் உடலை பார்த்து கதறி அழுதுள்ளனர். இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இதுகுறித்து இலக்கியாவின் உறவினர்கள் கூறுகையில் திருமணத்திற்கு முன்பே வரதட்சணையாக பல முறை பணம் வாங்கியுள்ளனர். தற்போது மீண்டும் வரதட்சணை கேட்ட போதும் பணம் கொடுத்துள்ளோம் என கூறியுள்ளனர்.

அதுமட்டுமின்றி அவர் உடலில் காயங்கள் இருப்பதால் வரதட்சணை கேட்டு அவரை கொலை செய்திருக்கலாம் எனவும் அவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman Committed suicide due to dowry Near Coimbatore


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal