ஹிஜாப் விவகாரம் சர்ச்சையான வேலூர் கோட்டை அகழியில் பெண் சடலம் மீட்பு.! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான வேலூர் கோட்டையில் ஹிஜாப் அணிந்த சில பெண்கள் தங்கள் நண்பர்களுடன் சென்றுள்ளனர். அப்போது சில நபர்கள் அந்த பெண்களை வழிமறித்து ஹிஜாப்பை கழற்றுமாறு வற்புறுத்தி அதனை வீடியோவும் எடுத்துள்ளனர்.

இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் சம்பந்தப்பட்ட வீடியோவை எடுத்தவர்கள் மற்றும் அதனை பகிர்ந்தவர்கள் என மொத்தம் 7 பேரை கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து வேலூர் கோட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் வேலூர் கோட்டையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் கோட்டை அகழியில் பெண்ணின் சடலம் ஒன்று கிடப்பதாக வந்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டனர்.

தீயணைப்பு துறையினரால் மீட்கப்பட்டது 40 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் என தெரியவந்த நிலையில் அவர் யார் என்பது குறித்த விசாரணை நடந்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக கோட்டை பகுதியில் ஹிஜாப் விவகாரம் சர்ச்சையான நிலையில் அங்கு பெண் சடலம் மீட்கப்பட்டதால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman body recovered from Vellore Fort


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->