கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட பெண்.. காவல்துறையினர் விசாரணை..!
Woman Body Founded in Water
கால்வாயில் பெண் பிணம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் வீரக்கோவில் மோட்டூர் கிராமம் அருகே வீரமங்கலம் ஏரி உள்ளது. இந்த ஏரியில் செல்லும் கால்வாயில் பெண் சடலம் ஒன்று கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து வந்த காவல்துறையினர் அந்த பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர்45 வயது உள்ள அந்த பெண் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Woman Body Founded in Water