தமிழ்ப்பெண்கள் கத்தி, கதறி அழ... சிரித்துக் கொண்டிருக்க CM ஸ்டாலினுக்கு எப்படிதான் மனம் வருகிறதோ..? அதிமுக கேள்வி!
ADMK Condemn to DMK MK Stalin
அதிமுக விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "விளம்பர மோகத்தில் மூழ்கி தவிக்கும் விளம்பர மாடல் விடியா அரசின் முதல்வர் ஸ்டாலின் அவர்களே!
நூறு நாட்களுக்கு மேலாக நீங்கள் தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி போராடிக் கொண்டிருக்கும் தூய்மை பணியாளர்களின் அழுகுரல் இன்னும் கூட உங்கள் காதுகளில் விழவில்லையா?
எங்களை வந்து பாருங்கள்,பேசுங்கள் என்று அவர்கள் கூக்குரலிடுவது உங்கள் செவிகளை எட்டவில்லையா?
பல லட்சம் செலவில் தற்புகழ் பாட மேடை அமைத்தவுடன் அங்கே ஓடோடி செல்லத் தோன்றிய உங்களுக்கு,100 நாட்களுக்கு மேலாக போராடும் மக்களை சென்று பார்க்க தோன்றவில்லையா?
அங்கே உங்கள் ஏவல்துறையால் குண்டுகட்டாக தூக்கி செல்லப்படுகிறவர்களும் பெண்கள் தானே!
அங்கே தங்கள் எதிர்காலம் என்னவென்று தெரியாமல் கதறி துடிப்பவர்களும் பெண்கள் தானே!
இந்தப் பெண்மணிகளெல்லாம் வாழ்க்கையில் வெற்றி பெறக் கூடாதா பொம்மை முதல்வரே!
இப்படி வேதனையில் தமிழ்ப்பெண்கள் கத்தி,கதறி அழுது கொண்டிருக்கும் போது விழா மேடையில் அமர்ந்து சிரித்துக் கொண்டிருக்க உங்களுக்கு எப்படிதான் மனம் வருகிறதோ" என்று தெரிவித்துள்ளது.
English Summary
ADMK Condemn to DMK MK Stalin