ரூ. 2.5 கோடி செலவில் திட்ட பணிகள்..எதிர்க்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்தார் !
With a budget of 2.5 crore project works were inaugurated by opposition leader Shiva
வில்லியனூர் சுல்தான்பேட்டையில் 2 கோடி ரூபாய்க்கான வளர்ச்சிப் பணிகளை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள் இன்று பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுல்தான் பேட்டையில் வசிக்கும் இஸ்லாமிய மக்கள் பக்க வாய்க்கால் உடன் கூடிய சாலை வசதிகள், சுகாதாரமான குடிநீர், தடையின்றி மின்சாரம், பழமை வாய்ந்த குளம் சீரமைத்தல், பயணியர் நிழற்குடை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற தருமாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினரிடம் முன்வைத்தனர். அந்த கோரிக்கைகளை பரிசீலித்த சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக, வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர் அடையாளமாக விளங்கும் குளம் ரூ. 1 கோடியே 99 லட்சம் செலவில் பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்டம் மூலம் சர்வதேச தரத்தில் புதுப்பித்து, நடைபாதை, இருக்கைகள் வசதியுடன் அமைக்கும் பணிக்கும், ரூ. 5 லட்சத்து 91 ஆயிரம் செலவில் பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலை துறை மூலம் பயணிகளின் நலன் காக்கும் பயணியர் நிழற்குடை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று காலை சுல்தான்பேட்டையில் நடைபெற்றது.
இதில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு, குளம் புதுப்பிக்கும் பணி மற்றும் பயணியர் நிழற்குடை அமைக்கும் பணியை பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் வீர செல்வம், கண்காணிப்பு பொறியாளர் சுந்தரமூர்த்தி, நீர்ப்பாசன கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவிப் பொறியாளர் லூய் பிரகாசம், இளநிலைப் பொறியாளர் கணேஷ், ஒப்பந்ததாரர் மனோகர் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள், ஜமாத்தார்கள், ஊர் முக்கியஸ்தர்கள், திமுக நிர்வாகிகள், வியாபாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
English Summary
With a budget of 2.5 crore project works were inaugurated by opposition leader Shiva