துர்நாற்றத்திற்கு விடிவுகாலம் பிறக்குமா...? கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு...! - Seithipunal
Seithipunal


பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் பயோமைனிங் தொழில்நுட்பத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு அகற்றும் பணிகளை மாநகராட்சி ஆணையர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கொடுங்கையூர் குப்பை வளாகம் சுமார் 342.91 ஏக்கர் பரப்பளவை கொண்டதாகும். இதில் சுமார் 252 ஏக்கர் நிலப்பரப்பில் பல ஆண்டுகளாக திடக்கழிவுகள் கொட்டப்பட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த வளாகத்தில் தேங்கியுள்ள 66 லட்சத்து 52 ஆயிரத்து 506 மெட்ரிக் டன் திடக்கழிவுகளை அகற்றுவதற்காக ரூ.640.83 கோடி மதிப்பில் மிகப்பெரிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த பணிகள் ஆறு கட்டங்களாக பிரிக்கப்பட்டு, மூன்று ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக பயோமைனிங் தொழில்நுட்ப முறையில் கழிவுகளை அகழ்ந்து பிரித்தெடுத்து நிலத்தை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பணிகள் நடைபெறும் இடத்தை நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர் சமீரன், திடக்கழிவு அகற்றும் பணிகளை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் நிறைவு செய்து நிலங்களை விரைவாக மீட்டெடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கும் ஒப்பந்ததாரர்களுக்கும் அறிவுறுத்தினார்.

மேலும், எந்தவித தாமதமும் இல்லாமல் பணிகளை தொடர்ந்து கண்காணித்து விரைவுபடுத்த அதிகாரிகள் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதுவரை 37 லட்சத்து 57 ஆயிரத்து 529 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் 3 ஏக்கர் நிலப்பரப்பு மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட அந்த நிலப்பரப்பில் 881 பசுமை மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.அந்த மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டுள்ள பகுதியையும் ஆணையர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், அவற்றை முறையாக பராமரித்து பசுமை வளமாக மாற்ற அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது இணை ஆணையாளர் ஜெயசீலன், வடக்கு மண்டல துணை ஆணையாளர் ரவி தேஜா மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர் என மாநகராட்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Will there time stench die down Corporation Commissioner inspects Kodungaiyur garbage dump


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->