பாஜகவில் மீண்டும் எண்ட்ரி கொடுக்கும் அண்ணாமலை? நயினார் நாகேந்திரன் தலையில் இடியை இறக்கிய டெல்லி பாஜக!பரபரப்பில் தமிழக பாஜக!
Will Annamalai re enter BJP Delhi BJP has dropped a bombshell on Nayinar Nagendran head Tamil Nadu BJP in a tizzy
தமிழக பாஜகவில் தலைமை மாற்றம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. தற்போது நயினார் நாகேந்திரன் மாநிலத் தலைவராக பொறுப்பேற்று கட்சியை வழிநடத்தி வரும் நிலையில், முன்னாள் தலைவர் அண்ணாமலை மீண்டும் தலைமைப் பொறுப்பிற்கு வருவாரா என்ற கிசுகிசுக்கள் கட்சிக்குள் வேகமெடுத்து வருகிறது.
2021ஆம் ஆண்டு மாநிலத் தலைவரான அண்ணாமலை, தனது அதிரடி பேச்சுகள் மற்றும் திமுக மீது உடனடி எதிர்வினைகளால் பாஜகவை ஊடகங்களின் மையப் புள்ளியாக மாற்றினார். “அண்ணாமலை பிரஸ் மீட்” என்ற வார்த்தையே அப்போது அரசியல் சூழலை பரபரப்பாக்கும் நிலையில் இருந்தது. பாஜக இளைஞர்களிடையே பிரபலமடைந்தது. ஆனால், அவரது கடுமையான விமர்சனங்கள் கூட்டணி கட்சியான அதிமுகவுடனான உறவை மோசமாக பாதித்தன.
அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா குறித்து அவர் பேசிய சில கூற்றுகள் அதிமுக தரப்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தின. இதன் உச்சத்தில், எடப்பாடி பழனிசாமி மக்களவைத் தேர்தலுக்கு முன்பு பாஜக கூட்டணியில் இருந்து விலகினார். பின்னர், மக்களவைத் தேர்தலில் பாஜக தமிழ்நாட்டில் பூஜ்ஜியம் பெற்றது. இந்த முடிவே மத்திய தலைமைக்கு பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. இதன் பின்னர் அண்ணாமலை மாநிலத் தலைமைப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அமித் ஷா தலையிட்டு பாஜக-அதிமுக கூட்டணியை மீண்டும் இணைத்தார். இதன் பின் நயினார் நாகேந்திரன் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். கூட்டணியுடன் நல்ல உறவை நடத்தும் திறனும், நிதானமான பேச்சும் காரணமாக நயினார் தலைமையை மத்திய பாஜக ஆதரித்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், நயினார் தலைமையில் பாஜக ஊடக வெளிச்சத்தில் குறைவாக இருப்பதாக, சிலர் கட்சிக்குள் கருத்து தெரிவித்துள்ளனர். அண்ணாமலை இருந்தபோது பாஜக ஒவ்வொரு நாளும் பேசப்பட்டது என்றே அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதற்கிடையில் அண்ணாமலை சமீபத்தில் எடுத்த நடவடிக்கைகள் புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது. சேலத்திலும் நெல்லையிலும் அவர் ரசிகர், நற்பணி மன்றங்களை தொடங்கியிருப்பது, கட்சிக்கு வெளியே தனிப்பட்ட அமைப்புகளை உருவாக்கும் முயற்சி என்று சிலர் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் அண்ணாமலை பாஜகவில் தனி சக்தியை உருவாக்க முயல்கிறார் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.
எனினும் மத்திய பாஜக வட்டாரங்களில், அண்ணாமலை இருந்தபோது பாஜக வாக்கு சதவிகிதம் உயர்ந்தது என்ற அறிக்கைகள் பரிசீலிக்கப்படும் நிலையில், அவருக்கு மீண்டும் முக்கிய பொறுப்பு வழங்கலாமா என ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் உடனடியாக தலைமை மாற்ற வாய்ப்பு இல்லை என்று வட்டாரங்கள் கூறுகின்றன.
நயினார் நாகேந்திரன் தான் 2026 சட்டசபைத் தேர்தல் வரை பாஜக மாநிலத்தை வழிநடத்துவார் என்பது தற்போது உறுதியான நிலைப்பாடு என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக பாஜகவில் அண்ணாமலை ஆதரவாளர்களும், நயினார் ஆதரவாளர்களும் உருவாக்கும் புதிய சக்தி சமநிலையால், தலைமை மாற்ற விவாதம் அடுத்த சில மாதங்களுக்கு மாநில அரசியலில் முக்கிய சர்ச்சையாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
English Summary
Will Annamalai re enter BJP Delhi BJP has dropped a bombshell on Nayinar Nagendran head Tamil Nadu BJP in a tizzy