தடையாக இருந்த கணவரை தீர்த்துக்கட்டிய மனைவி...! 8 ஆண்டுகளுக்கு பின் கரூரில் மனைவிக்கு ‘இரட்டை’ ஆயுள் தண்டனை...!
Wife who killed her husband who obstacle After 8 years wife gets double life sentence Karur
கரூர் மாவட்டத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த கொலை வழக்குக்கு தற்போது நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதித்துள்ளது.
எம்.வெள்ளாளப்பட்டி கீரிக்கல் பாதையில் உள்ள தோட்டப்பகுதியில் 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி 10-ஆம் தேதி, தூத்துக்குடி மாவட்டம் கொப்பம்பட்டியைச் சேர்ந்த தொழிலாளி சுப்புராஜ் (43) மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.இந்த சம்பவம் குறித்து பசுபதிபாளையம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், சுப்புராஜின் மனைவி அம்மு என்கிற அழகுலட்சுமி மற்றும் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கனகராஜ் (36) ஆகியோருக்கிடையில் கள்ளக்காதல் இருந்தது வெளிச்சத்திற்கு வந்தது.
இந்த உறவுக்கு சுப்புராஜ் தடையாக இருந்ததால், அவரை நீக்க திட்டமிட்டு, அழகுலட்சுமி, கனகராஜ் மற்றும் அவர்களுக்கு துணையாக இருந்த ஜெயலலிதா (60) ஆகியோர் இணைந்து கொலை செய்தது உறுதியாகியது.இதையடுத்து குற்றவாளிகளை காவலர்கள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கு கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீண்டகாலமாக விசாரணையில் இருந்து வந்தது.இந்நிலையில், வழக்கு விசாரணை நிறைவடைந்ததையடுத்து நீதிபதி இளவழகன் தீர்ப்பளித்தார். இதில், முக்கிய குற்றவாளியான கனகராஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனையுடன் ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
மேலும், அழகுலட்சுமி மற்றும் ஜெயலலிதாவுக்கு தலா ஆயுள் தண்டனையுடன் ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.மேலும், இந்த தண்டனைகளை ஒரே காலகட்டத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. தீர்ப்புக்குப் பிறகு, குற்றவாளிகள் திருச்சி மத்திய சிறை மற்றும் பெண்கள் சிறைகளில் அடைக்கப்பட்டனர் என தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Wife who killed her husband who obstacle After 8 years wife gets double life sentence Karur