எதற்காக திடீர் ஆய்வு!! அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மா.சுப்பிரமணியன்...!
Why sudden inspection Ma Subramanian government primary health center
தென்காசி மாவட்டத்தில் இன்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ''மா.சுப்பிரமணியன்'' ஆய்வு பணிகளில் ஈடுபட்டார். இதனால் இன்று அதிகாலை குண்டாறு பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டார். அதன் பிறகு செங்கோட்டை அருகே இருக்கும் வடகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீரென அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்று அங்கு ஆய்வு செய்தார்.

அதன் பின்னர் அங்குள்ள சிகிச்சை பெற்று செல்வோர் வருகை பதிவேடுகளில்உள்ள செல்போன் எண்ணை தொடர்கொண்டார். அப்போது அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியது குறித்தும், அவர்களுக்கு எவ்வாறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
மேலும் அந்த சிகிச்சையில் ஏதேனும் குறைகள் இருக்கிறதா? என்றும் கேட்டறிந்தார்.இதனிடையே, ஆய்வுக்கு பின்னர் சிறந்த முறையில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்ததற்காக வடகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு விருது வழங்க அதிகாரிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரிந்துரை செய்தார்.இது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
English Summary
Why sudden inspection Ma Subramanian government primary health center