பெற்றோர் சுற்றுலாவில் இருந்த வேளை: ஆவடியில் பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை...!
While his parents trip Plus1 student commits suicide hanging himself Avadi
சென்னை, ஆவடி காந்தி நகர், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த மனோகரன் கணினி விற்பனைத் தொழில் செய்து வருகிறார்.
இவருக்கு மனைவி, ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மகன் சாய் தீபக் (17) அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ்–1 வகுப்பில் பயின்று வந்தார்.கடந்த 11-ந் தேதி மனோகரன் குடும்பத்துடன் இந்தோனேசியாவுக்கு சுற்றுலா சென்றார்.

தேர்வு இருப்பதாக கூறி, பெற்றோருடன் செல்ல மறுத்த சாய் தீபக், வீட்டில் தனியாக தங்கி இருந்தார்.
சுற்றுலா முடிந்து நேற்று முன்தினம் இரவு குடும்பம் வீடு திரும்பியபோது, படுக்கை அறையில் மின்விசிறி கொக்கியில் வேட்டியால் தூக்குப்போட்டு மாணவர் உயிரிழந்திருந்ததை கண்டு பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இதையடுத்து தகவலறிந்த ஆவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்குப் பதிவு செய்து, மாணவரின் தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
While his parents trip Plus1 student commits suicide hanging himself Avadi