15 ஆயிரம் ரூபாய் எங்கே...? பொய் புகார் கூறி வாலிபர் மீது தாக்குதல்...! - தூத்துக்குடியில் காவலர்கள் அதிரடி விசாரணை
Where 15 thousand rupees youth attacked basis false complaint Police Thoothukudi conduct thorough investigation
தூத்துக்குடி பாத்திமாநகர் 5-வது தெருவைச் சேர்ந்த இளைஞர் மரியசஞ்சய் (21) மற்றும் கீதாஜீவன் நகர் பகுதியைச் சேர்ந்த சிலுவை பிச்சை என அழைக்கப்படும் பிச்சையா (28) ஆகியோருக்கிடையே ஏற்பட்ட தகராறு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு காவல் நிலையங்களில் ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ள நபராக பிச்சையா இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 4-ம் தேதி இரவு, மதுபோதையில் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் மரியசஞ்சயின் தெருவில் விழுந்து கிடந்த பிச்சையாவை, மனிதநேய உணர்வுடன் மரியசஞ்சய் மற்றும் அவரது உறவினர்கள் பாதுகாப்பாக அவரது இல்லத்துக்கு அழைத்து சென்று ஓய்வெடுக்க ஏற்பாடு செய்தனர்.
ஆனால், அதே மனிதநேய உதவி பின்னர் பிரச்சனையாக மாறியது. கடந்த 15-ம் தேதி இரவு மரியசஞ்சயை நேரில் சந்தித்த பிச்சையா, “என் பையில் இருந்த ரூ.15 ஆயிரத்தை நீயே எடுத்தாய்” என குற்றச்சாட்டு முன்வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
தாம் எந்தத் தவறும் செய்யவில்லை என மரியசஞ்சய் தெளிவுபடுத்தியபோதும், அதனை ஏற்க மறுத்த பிச்சையா ஆவேசத்தில் அவரை தாக்கி தரையில் தள்ளியுள்ளார்.
இதில் மட்டுமின்றி, அங்கிருந்த மரியசஞ்சயின் இருசக்கர வாகனத்தையும் கத்தியால் குத்தி சேதப்படுத்தியதோடு, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் கத்தியைக் காட்டி மிரட்டியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த திடீர் தாக்குதலில் காயமடைந்த மரியசஞ்சய், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சம்பவம் தொடர்பாக மரியசஞ்சய் அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
English Summary
Where 15 thousand rupees youth attacked basis false complaint Police Thoothukudi conduct thorough investigation