குறைந்து வந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று எவ்வளவு?
What water level declining Mettur Dam today
கடந்த சில நாட்களாக சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சற்று குறைந்து காணப்பட்டது. இதில் அணைக்கு வரும் நீர்வரத்தை விட அதிகளவில் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் அணையின் நீர்மட்டம் சரியத்தொடங்கியது.

இதில் இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியாக குறைந்து காணப்பட்டது. அதேபோல் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8,354 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது.
மேலும், இந்த அணையிலிருந்து பாசனத்துக்கு நொடிக்கு 15000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. கூடுதலாக கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 850 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது.
இதில் தற்போது அணையில் 91.88 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
English Summary
What water level declining Mettur Dam today