“என் பின்னால் வருவது சிகர் கூட்டம் அல்ல, கருத்தியல் கூட்டம்!” – விஜயை மீது சீமான் மறைமுக தாக்கு?
What is coming after me is not a group of sikhs but an ideological group Is Seeman an indirect attack on Vijay
கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த துயரச் சம்பவத்துக்குப் பிறகு, தமிழக அரசியல் சூழலில் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது அனைவரையும் உலுக்கியது. அந்த சம்பவம் குறித்து நீதிமன்றம் கடுமையாக விமர்சித்த நிலையில், தற்போது நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வெளியிட்ட கருத்து, அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்துக்கு வழிவகுத்திருக்கிறது.
சீமான் தனது சமீபத்திய உரையில் கூறியதாவது –“என்னைப் பின்தொடர்வது ரசிகர்கள் கிடையாது. அவர்கள் கருத்தியல் மணிகள். என்னைப் போல உணர்வுடன் இருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்கள் தான் என்னுடன் இருக்கிறார்கள். இது சாதாரண கட்சி அல்ல, தமிழ் தேசிய விடுதலைக்கான மக்கள் ராணுவம். நான் வைத்திருப்பது பதக்கர்கள் அல்ல, மணிகள் — நெல் மணிகள். ஒன்று விதைத்தால் ஆயிரம், இராயிரமா முளைக்கும் கூட்டம் இது!” என்று சீமான் உருக்கமாக பேசியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது –“என்னைப் பற்றிப் பேச சிலர், பாஜகவுக்கு மறைமுக ஆதரவு தருகிறேன் என விமர்சிக்கிறார்கள். பாஜக தனியாக நிற்கட்டும், நானும் தனியாக நிற்கிறேன். என்னை விட ஒரு ஓட்டு கூட வாங்கி காட்ட சொல்லுங்கள்!” என சவால்விட்டார்.
சீமான் இந்த பேச்சு வழியாக, நேரடியாக பெயர் சொல்லாதபோதும், விஜயை நோக்கி மறைமுகமாக தாக்கியிருக்கிறார் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
ஏனெனில், சமீபத்தில் விஜயைச் சுற்றி “இவர் பின்னால் ரசிகர் கூட்டம் தான் இருக்கிறது, தொண்டர்கள் இல்லை” என்ற விமர்சனங்கள் எழுந்திருந்தன. கரூர் சம்பவத்துக்குப் பிறகு, விஜயின் கட்சியில் ஒருங்கிணைப்பு இல்லாதது, தொண்டர்கள் கட்டுப்பாட்டை இழந்தது போன்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன.
அந்தச் சம்பவத்தின் போது, விஜய் எந்த நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்தவில்லை என்றும், சில நெருங்கிய நபர்களான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, மற்றும் வியூக ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோரிடமே முடிவெடுத்தார் என்றும் செய்திகள் வெளியாகின. இதனால் கட்சிக்குள் இரண்டாம் நிலை நிர்வாகிகள் விஜயை சந்திக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
விஜய் மக்கள் மத்தியில் தோன்றும் போதெல்லாம், நிர்வாகிகள் கூட அவரை பார்க்க முயல்வதிலேயே கவனம் செலுத்துகிறார்கள்; மக்கள் ஒழுங்கை கவனிக்க யாரும் முன்வரவில்லை என்பது மேலும் விமர்சிக்கப்பட்டது. இதனால் “விஜய்க்கு தொண்டர்கள் இல்லை, ரசிகர்கள் கூட்டமே” என்ற குற்றச்சாட்டு வலுத்தது.
இந்நிலையில்தான் சீமான் வெளியிட்ட இந்த “கருத்தியல் மணிகள்” குறித்த உரை, நேரடியாக விஜயை குறிக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பலரும் இதை “மறைமுகமாக விஜயை தாக்கிய உரை” என்று கூறுகின்றனர்.
சீமானின் இந்த உரை, தமிழ்நாட்டு அரசியல் மேடையில் புதிய விவாதத்தையும், கட்சித் தலைவர்களுக்கிடையிலான மறைமுகப் போட்டியையும் மீண்டும் வெளிக்கொணந்துள்ளது.
English Summary
What is coming after me is not a group of sikhs but an ideological group Is Seeman an indirect attack on Vijay