'அயோத்தியை அடுத்து எங்களிடம் அடுத்த இலக்கு காசி, மதுரா மீதுதான்'; யோகி ஆதித்யநாத்..! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத், ஆங்கிலப் பத்திரிகை ஒன்றின் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் பல்வேறு கேள்வகளுக்குப் பதில் அளித்தார். அதில், அயோத்திக்குப் பிறகு, காசி, மதுரா விவகாரங்கள் எழுப்பப்படுமா..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர்,.''நாங்கள் எல்லா இடங்களுக்கும் செல்வோம். அங்கு (காசி மற்றும் மதுரா) நாங்கள் ஏற்கெனவே சென்றுவிட்டோம்" என தெரிவித்துள்ளார்.

அத்துடன், உலகப் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதி, கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக வழக்கு உள்ளது. அதேப்போல, கிருஷ்ணர் பிறந்த மதுராவில் உள்ள கோயிலை ஒட்டி ஷாஹி ஈத்கா மசூதி உள்ளது. இந்த மசூதியும், கிருஷ்ணர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக வழக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்த இவ்விரு பகுதிகளில் இருந்தும் குறித்த இரண்டு மசூதிகளும் அகற்றப்பட வேண்டும் என கோரி இந்துக்கள் தரப்பில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன என்றும் அறிவித்துள்ளார்.

மேலும், உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக பதவியேற்று எட்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளமை குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்துள்ள யோகி ஆதித்யநாத், "உத்தரப் பிரதேசம் நாட்டின் மிகப் பெரிய மாநிலம். எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு பணியாற்ற எங்கள் கட்சி எனக்கு வாய்ப்பளித்துள்ளது என்று பெருமிதமாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த எட்டு ஆண்டுகளில் உத்தரப் பிரதேசத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்றும், அந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக நான் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், யோகி ஆதித்யநாத்தின் பதவிக்காலத்தில் உங்களின் மிகப் பெரிய சாதனையாக எதைக் கருதுகிறீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "சாதனைகளின் பட்டியல் மிகவும் நீளமானது. அதில் இருந்து ஒன்றை தேர்ந்தெடுப்பது கடினம். இருப்பினும், 500 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டதை எனது வாழ்வின் மிகச் சிறந்த தருணங்களில் ஒன்றாகக் கருதுகிறேன். எனது வாழ்க்கையில் மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வு அது" என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Yogi Adityanath says that after Ayodhya our next target is Kashi and Mathura


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->