SIR மூலம் ஆத்தூர் தொகுதில் ஒரே இரவில் 22,000 வாக்காளர்கள் பெயர் நீக்கம்; அமைச்சர் இ.பெரியசாமி தகவல்..!
Minister E Periasamy informed that 22000 voters names were deleted overnight in the Athur constituency
அம்பேத்கரின் 70-வது நினைவு தினத்தையொட்டி, இன்று (டிசம்பர் 06) திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அமைச்சர் இ.பெரியசாமி மரியாதை செய்த செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது: திருப்பரங்குன்றம் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம் என்று கூறியுள்ளார். அத்துடன், திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து தவெக தலைவர் விஜய் எந்த கருத்தும் தெரிவிக்காதது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், தவெக இன்னும் அரசியல் கட்சியாக அங்கீகாரமே பெறவில்லை என்றும், அரசியல் கட்சியாக இருந்தால் நிச்சயம் கருத்து கூறுவார்கள். ஆனால், கருத்து கூறவில்லை என்றால் அது பற்றி பேசி என்ன பயன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து அவர் பேசுகையில், பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தவெகவில் இணைந்தது குறித்து அதிமுகவிடம் தான் கேட்க வேண்டும் என்றும், அவர் அனைத்து கட்சிகளிலும் இருந்தார் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரத்தில், தான் ஒரே ஒரு கட்சியில் தான் இருக்கிறேன். தன்னுடைய ஆத்தூர் தொகுதியில் ஒரே இரவில் ‘ஆப்சென்ட்’ எனக்கூறி 6,000 பேர், இறந்தவர்கள் எனக்கூறி 16,000 பேர் என மொத்தம் 22,000 பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு புகார் அனுப்பியுள்ளதாகவும், திண்டுக்கல்லில் தேர்தல் அலுவலர்கள் வாக்காளர்களை சேர்ப்பதற்கு பதிலாக, ஒரே அறையில் இருந்து பெயர்களை நீக்கி விட்டனர் என்றும் சுற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், ஆத்தூர் தொகுதியில் இடமாற்றம் எனக்கூறி 22,000 பேரை நீக்கியுள்ளதாகவும், அவர்கள் பெயரை சேர்ப்பதாக திண்டுக்கல் ஆட்சியர் கூறியிருக்கிறார். இருப்பினின் அதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறியுள்ளதோடு, என்ன நடக்கிறது என்று தனக்கு தெரியவில்லை. நடக்கட்டும், என்ன செய்ய முடியும் என்றும் பேசியுள்ளார்.

அத்துடன், இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் தான் விளக்கம் சொல்ல வேண்டும் என்றும், வாக்காளர்கள் தொகுதியில் இருக்கிறார்களா..? என்றும், அங்கு சென்று பார்த்தார்களா..? . வாக்காளர்கள் மனுவைப் பூர்த்தி செய்து கொடுத்தும் அவர்களை இடம்பெயர்ந்தோர் பட்டியலில் சேர்த்து உள்ளார்கள். சிலரை இறந்தவர்களாகச் சேர்த்து உள்ளார்கள் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், திண்டுக்கல்லில் உள்ள திமுக பிரமுகர் முருகானந்தம் என்பவரை இறந்தவர்கள் பட்டியலில் சேர்த்து உள்ளார்கள் என்றும், எஸ்ஐஆர் பணிக்காக ஊழியர்கள் எங்குமே செல்லவில்லை. அவர்கள் உட்கார்ந்த இடத்திலேயே விண்ணப்பங்களை நிரப்பிவிட்டு ஏதோ கணக்கு காட்ட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்காக வேலை செய்கிறார்கள் என்றும் அமர்ச்சர் பெரியசாமி குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Minister E Periasamy informed that 22000 voters names were deleted overnight in the Athur constituency