மதுபோதையில் மேடையில் நின்ற மணமகன்.! மணமகள் எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாம்பாக்கம் பகுதியை சேர்ந்த வாலிபருக்கும், மேலகோட்டையூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பெரியோர் சம்மதத்துடன் நேற்று திருமணம் நடைபெற இருந்தது. 

அதன் படி, நேற்று முன்தினம் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இருவீட்டாரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என்று ஏராளமானோர் வந்திருந்தனர். நிகழ்ச்சியில், மணமகளுடன் மேடையில் நின்று கொண்டிருந்த மணமகன் மதுபோதையில் மணமகள் வீட்டாரிடம் தகராறு செய்துள்ளார். 

இதனால், மண்டபத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த மணமகள் வீட்டார் சம்பவம் தொடர்பாக போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். 

அந்த விசாரணையின் போது மணமகன் தான் செய்தது தவறுதான், மன்னித்து விடுங்கள் என்று மன்னிப்பு கேட்டுள்ளார். இருப்பினும், மணமகள் பிடிவாதமாக திருமணத்தை நிறுத்திவிட்டு திருமணத்திற்காக செய்யப்பட்ட செலவு மற்றும் மணமகனுக்கு போட்ட நகைகளை திருபித் தருமாறு கேட்டுள்ளார். 

இதனால், திண்டாடிய போலீசார் வேறுவழியில்லாமல் மணமகனை திருமண மண்டபத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியே அழைத்து வந்தனர். இதனால் மணமகன் வீட்டார் மற்றும் உறவினர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

wedding stopped the groom arrived drunk in chengalpattu


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->