'தமிழகத்தின் உரிமையில் அணுவளவும் விட்டுக்கொடுக்க மாட்டோம்'..! - காவிரி விவகாரத்தில் அமைச்சர் ஆனந்த் அதிரடி முழக்கம்...! - Seithipunal
Seithipunal


காவிரி நீரைப் பெறுவதில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சட்டசபையில் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கர்நாடகாவிடமிருந்து உரிய நீரைப் பெறுவது, மேட்டூர் அணை திறப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் அவர் விரிவாக விளக்கம் அளித்தார்.

சட்டசபையில் காவிரி விவகாரம் குறித்து அமைச்சர் ஆனந்த் பேசியதாவது,"ஒவ்வொரு மாதமும் கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய உரிய காவிரி நீரைப் பெறுவதில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.இந்தப் பிரச்சினை தொடர்பாக இரு மாநில முதல்-அமைச்சர்களும் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்துவதற்காக கடந்த 3-ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், கடைசி நேரத்தில் கர்நாடக முதல்-அமைச்சர் அந்தச் சந்திப்பை நடத்த முடியாது எனத் தெரிவித்தார். உரிய சூழல் உருவாகும்போது நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.இந்த ஆண்டு மேட்டூர் அணையை வழக்கமான முறையில் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு மட்டுமே அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாததால் காவிரி ஆற்றில் நீர்வரத்தும் குறைந்துள்ளது. எனவே, தற்போதைய நீர்வள நிலவரம் மற்றும் எதிர்கால சூழலை கவனத்தில் கொண்டு மேட்டூர் அணையைத் திறப்பது குறித்து அரசு உரிய நேரத்தில் முடிவு எடுக்கும்.தவெக அரசு காவிரி நீர் விவகாரத்தில் ஒருபோதும் சமரசப் பாதையைத் தேர்ந்தெடுக்காது.

தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டுவதற்காக சட்டரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காவிரி நீர் தொடர்பான தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கும் முதல்-அமைச்சர் விஜய் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.தமிழ்நாட்டின் விவசாயிகளின் நலனையும், காவிரி நீர் மீதான மாநிலத்தின் உரிமையையும் பாதுகாப்பதில் அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது” என்று அமைச்சர் ஆனந்த் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

We will not give up even an atom of Tamil Nadu rights Minister Anand bold slogan Cauvery issue


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->