விவாகரத்து வழக்கு; முதல்வர் விஜய் ஆஜராகவில்லை; நீதிமன்ற வாயில் மூடப்பட்ட நிலையில் சங்கீதாவிடம் விசாரணை..! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியுள்ள நிலையில், கணவர் விஜய் இடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்தார்.

குறித்த மனுவை விசாரித்த செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம், இருவரையும் ஆஜராக உத்தரவிட்டு, வழக்கை கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. ஆனால், அன்றைய தினம் இருவரும் ஆஜராகாத காரணத்தினால், ஜூன் 15-ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அன்றைய தினகமும் இருவரும் ஆஜராகவிலை. முன்னாள் நடிகராக இருந்து விஜய் பிரபலமாகியுள்ளதோடு, தற்போது தமிழாகி முதல்வராகவும் உள்ளார். இதனால் விஜய் -சங்கீதா இருவரும் பிரபலங்களாக உள்ளனர். இதன் காரணமாக இருவரிடம் காணொளி காட்சி வாயிலாக ஆஜராக அனுமதிக்க வேண்டுமென இருதரப்பு வழக்கறிஞர்களும் கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி, இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இருவரும் காணொளி காட்சி வாயிலாக ஆஜராகி விளக்கம் அளிக்கும் வகையில் இணையதள முகவரி சமர்ப்பிக்கப்பட்டு விசாரணை நடந்தது.

அதன்படி, முதலில் சங்கீதாவிடம் காணொளி காட்சி மூலமாக விசாரணை தொடங்கப்பட்டது. அப்போது நீதிமன்றத்தில் அனைத்து வாயில்களும் மூடப்பட்ட நிலையில் சங்கீதாவிடம் தற்போது காணொளி காட்சி மூலமாக விசாரணை நடந்துள்ளது. முதலில் சிறிது நேரம் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இன்று தமிழகத்தின் சட்டமன்ற சபை கூறியுள்ளதால் முதலமைச்சர் விஜய் விசாரணைக்கு ஆஜராக வில்லை. இதனால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது என்றாலும் சிறிது நேரத்தில் விசாரணை மீண்டும் தொடங்கப்பட்டு முதலாவதாக சங்கீதாவிடம் விசாரணை நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sangeeta is being questioned while the court is closed in the Chief Minister Vijay divorce case


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->