குழந்தைகளுக்கு ஆபத்து விளைவிக்கும் அம்சங்கள்; மெட்டா நிறுவனத்துக்கு 567 மில்லியன் டாலர் அபராதம்..! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநில நீதிமன்றம், மெட்டா நிறுவனத்துக்கு 567 மில்லியன் டாலர் அபராதம் விதித்துள்ளது. இது குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக அந்நிறுவனத்திற்கு எதிராக வழங்கப்பட்ட மிகப்பெரிய தீர்ப்பாக பார்க்கப்படுகிறது.

மெட்டா தளங்களில் குழந்தைகளுக்கு ஆபத்து விளைவிக்கும் அம்சங்கள் குறித்து நிறுவனம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கவில்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதாவது, மெட்டா ஒரு தொழிற்சாலை போன்றது என்று கூறிய நீதிமன்றம், அது விளம்பரங்களையும் உள்ளடக்கங்களையும் தயாரிக்கிறது என்றும்,  ஆனால், குழந்தைகளுக்கு ஏற்படும் உளவியல் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியமும் இருப்பதாக நீதிமன்றம் கூறியுள்ளது.

அத்துடன், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் த்ரெட்ஸ் ஆகியவற்றைச் சொந்தமாகக் கொண்டு இயக்கும் மெட்டா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் வியாழக்கிழமை அன்று, "நாங்கள் இந்தத் தீர்ப்புடன் உடன்படவில்லை, மேல்முறையீடு செய்வோம்" என்று கூறி இருந்தார். அதேநேரம், குழந்தை பாதுகாப்பு விவகாரத்தில் மெட்டா நிறுவனத்திற்கு எதிராகத் தீர்ப்பளிக்கப்பட்டது அதுவே முதல்முறை ஆகும்.

இந்த வழக்கில் மெட்டா நிறுவனத்திற்கு ஏற்கனவே 375 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்ய எண்ணம் இருப்பதாக நிறுவனம் கூறியிருந்தது. இந்நிலையில், தற்போது நிறுவனம் எதிர்நோக்கும் மொத்த அபராதம் 942 மில்லியன் டாலர் ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Meta fined 567 million doller for features that are harmful to children


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->