எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்க மாட்டோம் - டி.டி.வி. தினகரன்!
We will not accept Edappadi Palaniswami as the Chief Ministerial candidate TTV Dinakaran
தஞ்சையில் இன்று, முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவச் சிலைக்கு அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:“75 ஆண்டுகள் பழமையான கட்சிகளுக்கும், 50 ஆண்டுகள் பழமையான கட்சிகளுக்கும் இணையாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உருவாகிவிட்டது. வரவிருக்கும் தேர்தலில் நிச்சயம் முத்திரை பதிக்கும்.”
“நாங்கள் இடம்பெறும் கூட்டணிதான் அடுத்த ஆட்சியை அமைக்கும். இதை ஆணவத்தோடு அல்ல, உறுதியாகத்தான் கூறுகிறேன். வரும் மே மாதத்தில் இதன் அர்த்தம் உங்களுக்கு புரியும்.”
“எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கும் நிலை ஏற்பட்டால், அதை எங்கள் கட்சி ஏற்றுக்கொள்ள வாய்ப்பே இல்லை.”“அ.தி.மு.க ஒன்றிணைப்புக்கான 10 நாட்கள் கெடு முடிந்தது குறித்து விளக்கத்தை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அளிப்பார்.”“எடப்பாடி பழனிச்சாமி டெல்லி செல்வது அவரின் தனிப்பட்ட விஷயம். அதைப் பற்றி அவரிடமே கேட்க வேண்டும்.”இவ்வாறு டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
English Summary
We will not accept Edappadi Palaniswami as the Chief Ministerial candidate TTV Dinakaran