'பிரசாதம் தர்றோம் வெளில வாங்க'...! கோவையில் கல்லூரிப் பெண்ணைக் காரில் கடத்தி 5 லட்சம் நகை கொள்ளை...! - முன்னாள் வாடகை தம்பதியின் பகீர் விஸ்வரூபம்!
We offer offerings outsiders college girl kidnapped car Coimbatore and 5 lakhs jewellery stolen Former surrogate couple true face
கோவை அருகே உள்ள திருமலையாம்பாளையத்தைச் சேர்ந்த கஸ்தூரி ரங்கநாதனின் மனைவி மோனிகா (32) தனியார் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இவர்களின் வீட்டில் சென்னை திருவள்ளூரைச் சேர்ந்த விஸ்வநாதன் (42) மற்றும் அவரது மனைவி ஷோபா (38) வாடகைக்கு தங்கி வந்தனர்.

பின்னர் அவர்கள் வீட்டை காலி செய்து சொந்த ஊருக்குத் திரும்பிச் சென்றனர்.இந்நிலையில், சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் கோவைக்கு வந்த அந்த தம்பதி, மோனிகாவை செல்போன் மூலம் தொடர்புகொண்டு, “கோவிலில் இருந்து பிரசாதம் கொண்டு வந்துள்ளோம். கல்லூரிக்கு வெளியே வாருங்கள், நேரில் வழங்குகிறோம்” என்று கூறியுள்ளனர்.இதனை உண்மையென நம்பிய மோனிகா, கல்லூரி வளாகத்தின் முன்புறத்தில் காத்திருந்தார்.
அப்போது காரில் வந்த விஸ்வநாதன் மற்றும் ஷோபா, பிரசாதம் வழங்குவது போல் அணுகிய நிலையில், திடீரென மோனிகாவை வலுக்கட்டாயமாக காருக்குள் ஏற்றி அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.அதிர்ச்சியில் உறைந்த மோனிகா உதவி கோரி குரல் எழுப்ப முயன்றபோது, சத்தமிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அவரது கழுத்தில் அணிந்திருந்த தாலிக்கொடி, தங்கச் சங்கிலி, மோதிரம் உள்ளிட்ட நகைகளை பறித்துக் கொண்ட தம்பதி, பின்னர் மக்கள் நடமாட்டம் குறைந்த பகுதியில் அவரை இறக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். பறிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு 5 லட்சம் ரூபாயைத் தாண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக மோனிகா அளித்த புகாரின் அடிப்படையில் க.க.சாவடி காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.
தொடர்ந்து எட்டிமடை மேம்பாலம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவலர்கள், சந்தேகத்திற்கிடமாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர்.
அப்போது காரில் இருந்தவர்கள் விஸ்வநாதன் மற்றும் ஷோபா என்பதும், நகைகளை பறித்துவிட்டு கேரளாவுக்குத் தப்பிச் செல்ல முயன்றதும் விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து இருவரையும் காவலர்கள் கைது செய்து, அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நகைகளை மீட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
We offer offerings outsiders college girl kidnapped car Coimbatore and 5 lakhs jewellery stolen Former surrogate couple true face