ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்தியக் கிரிக்கெட் அணியின் சீருடை பிரச்சனை சுமூகமாக தீர்வு...! - Seithipunal
Seithipunal


2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவுள்ள இந்தியக் கிரிக்கெட் அணிக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ விளையாட்டு உடைகளில் (Kit) அளவு சார்ந்த (Size issue) சிக்கல்கள் எழுந்தன. 

தற்போது இந்தச் சிக்கல்கள் முழுமையாகத் தீர்க்கப்பட்டு, விளையாட்டு வீரர்களுக்குச் சரியான ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான சீருடைகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் (MYAS) அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்திய-ஜப்பான் இரு நாட்டு உறவுகளின் 75-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், இந்திய மற்றும் ஜப்பான் ஆண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க T20 சர்வதேசப் போட்டி நடைபெறவுள்ளது.

'சுஸுகி கப்' (Suzuki Cup) என்ற பெயரிலான இப்போட்டி செப்டம்பர் 22 அன்று ஜப்பானின் டோச்சிகி மாகாணத்தில் உள்ள சானோ சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இப்போட்டி ஆசிய விளையாட்டுப் தொடரின் ஒரு பகுதி அல்ல என்பதால், இந்திய அணி இதில் தங்களது வழக்கமான BCCI சீருடையை அணிந்து விளையாடும் என்று கூறப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் சானே தகைச்சி இடையேயான உச்சிமாநாட்டில் எட்டப்பட்ட 'ஸ்போர்ட் 75' என்ற விளையாட்டுக் கூட்டுறவின் கீழ் இப்போட்டி நடத்தப்படவுள்ளது.

ஜப்பானின் ஐச்சி-நாகோயாவில் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. செப்டம்பர் 28 அன்று நடைபெறும் காலிறுதிப் போட்டியில் களமிறங்கும் இந்திய அணி, இதர போட்டிகள் அனைத்திலும் தங்களது அதிகாரப்பூர்வ ஆசிய விளையாட்டுப் போட்டிச் சீருடையை அணிந்து விளையாடும்.

ஜப்பான் T20 போட்டி மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய அணி: 

கேப்டன்: ஸ்ரேயாஸ் ஐயர், துணை கேப்டன்: திலக் வர்மா. வீரர்கள்: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (WK), இஷான் கிஷன் (WK), சிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ஜஸ்ப்ரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வைபவ் சூரியவன்ஷி, யாஷ் தாக்கூர், விப்ராஜ் நிகாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Indian cricket team's uniform for the Asian Games


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->