மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது...!
water flow in Mettur Dam has increased due to rain
கடந்த சில தினங்களாக தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், சேலம் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில், நேற்று மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 2 ,323 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில், இன்று 3,619 கனஅடியாக அளவில் அதிகரித்து காணப்படுகிறது.
இதனால், அணையின் நீர்மட்டம் 107.95 அடியாக உயர்ந்துள்ளது.மேலும், அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக தொடர்ந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனிடையே, தற்போது அணையில் 75.52 டி.எம்.சி. தண்ணீர் அளவு உள்ளது.இதனால் மேட்டூர் அணைக்கு செல்லும் மக்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
English Summary
water flow in Mettur Dam has increased due to rain