ஒரே நாளில் 19 ஆயிரம் கன அடி வித்தியாசத்தில் குறைந்த ஒகேனக்கல் நீர்வரத்து...!
Water flow in Hogenakkal reduced by 19 thousand cubic feet single day
தென்மேற்கு பருவமழையால் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் விட்டு விட்டு கனமழை பெய்து வருவதால்,கர்நாடக மாநிலத்தில் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த 2 அணைகளும் முழுமையாக நிரம்பி விட்டது.

மேலும், அணைகளின் பாதுகாப்பு கருதி அதிக அளவில் உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
இதில் நேற்று மாலை ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 43000 கனஅடி தண்ணீர் வந்தது.மேலும், கர்நாடகா அணைகளிலிருந்து திறக்கப்பட்ட நீரின் அளவு குறைக்கப்பட்டது.
இதனால் இன்று காலை 8 மணி நில வரப்படி நீர்வரத்து 24000 கனஅடியாக குறைந்தது வந்தது.இதன் காரணமாக மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள், காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் தொடர்ந்து அளவீடு செய்து கண்காணித்து வருகிறார்கள்.
English Summary
Water flow in Hogenakkal reduced by 19 thousand cubic feet single day