பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
Warning to the people living along the Bhavani river bank
கோவை உள்ளிட்ட பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக பில்லூர் அணை நிரம்பி வரும் நிலையில், அணையின் 4 மதகுகள் திறக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்பட தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக அந்த இரண்டு மாவட்டங்களுக்கும் நேற்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடப்பட்டு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த இந்த இரு மாவட்டங்களிலும் நேற்று ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் அதிகனமழை பெய்தது அதேபோல தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்தது.
இந்தநிலையில் கனமழை காரணமாக பில்லூர் அணை நிரம்பி வரும் நிலையில், அணையின் 4 மதகுகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பவானி கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கோவை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார். தாழ்வான பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு போலீசார் மைக் மூலம் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.பில்லூர் அணையில் இருந்து 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
English Summary
Warning to the people living along the Bhavani river bank